சீனாவில் நடுவீதியில் திடீரென ஏற்பட்ட 20 அடி பள்ளத்தால் பரபரப்பு

சீனாவின் வடக்கே நன்னிங் என்ற நகர் உள்ளது. இதன் முக்கிய சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நடு வீதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. 

அது 20 அடி அகலத்தில், 20 அடி ஆழம் இருந்தது. உடனே வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஒரு காரின் முன்சக்கரம் பள்ளத்தின் விழிம்பில் இறங்கியபடி நின்று விட்டதால் அதை ஓட்டி வந்த சாரதி அதிர்ஷ்டவசமாக தப்பினார். 

இந்த சாலையில் சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குழி தோண்டி புதிய கேபிள்களை பதித்ததாகவும், அதை சரிவர மூடாமல் விட்டதே இச்சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.