சீனாவுக்கு எதிராக பௌத்த துறவி தீக்குளிப்பு!

சீனாவுக்கு எதிராக பௌத்த துறவி தீக்குளிப்பு!

நேபாள தலைநகர் காத்மாண்டில் 20 வயது மதிக்கதக்க பெளத்த துறவி ஒருவர் தீக்குளித்துள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்ற அவர் கழிவறைக்கு சென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகின்றது. 

பின்னர் எரிந்த தீயுடன் தெருவில் ஓடிய அவரை பொலிசார் வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். 

திபெத் நாட்டை 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா ஆக்கிரமித்து கொண்டது. இதனால் ஏராளமான திபெத்தியர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். 

திபெத்துக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். 

2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 100 பெளத்த துறவிகள் இதேபோல் தீக்குளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.