சொலமன் தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவில் 8 புள்ளியாக இது பதிவாகி உள்ளதால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.