ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (PHOTOS)

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைதான பாலேந்திரன் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா நகர சபை மைதானத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

ஜெயகுமாரியை விடுதலை செய், ஆர்ப்பாட்டத்தில் சட்ட விரோத கைதுகளை நிறுத்து, காணாமல் போனவர்கள் குறித்து பதில் கூறு, பழிவாங்கலை நிறுத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம், காணாமல் போனோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.