சாவகச்சேரி – கச்சாய் - கடற்கரை வீதியில் வைத்து இனந்தெரியாத குழு ஒன்றினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார்ச் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆதரவாளர் இன்று பிற்பகல் 2.15 அளவில் தனது பிள்ளைகளைப் பாடசாலையில் இருந்து அழைத்து வரப் புறப்பட்டபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.