ஹிந்தி கஜினி புகழ் ஜியா கான், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மது அருந்தியிருக்கிறார் என்று அவரது உடலை பரிசோதனை செய்த தடயவியல் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜியா கான் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்த பொலிஸார் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் ஜியாகானின் கையடக்கத் தொலைபேசி மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த நிலையில் பொலிசார் ஜியாவின் காதலனிடம் விசாரணை நடத்திவருகின்றன
பிரபல ஹிந்தி நடிகை ஜியாகானின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணமாக இருக்கலாம் என்று மும்பை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அவரது காதலர் சூரஜ் பஞ்சோலியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிக்கிய தற்கொலை கடிதங்கள் அடிப்படையில அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார்