கமல் நடித்து வெளியாகப்போகும் விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 11ல் வெளியாகும் என்பதில் கமல் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென தேவி தியேட்டர் இன்று மாலை முதல் முன்பதிவை நிறுத்திவிட்டது. அதற்கு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? என்று கோலிவுட்டில் கிளம்பிய பெரும் வதந்திதான் காரணம் என கூறப்படுகிறது.
தியேட்டர் அதிபர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்ட சில முக்கிய அம்சங்களை கமல் தரப்பில் ஏற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளதால், ரிலீஸ் தேதி ஜனவரி 25க்கு மாறலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டி.டி.எச்சில் ஜனவரி 10ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 24ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது.