தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனின் உயிரை பறித்த தேங்காய்

பிடபெத்தர பொலிஸ் பிரிவின் சியம்பலாகொட கல்போத்த பிரதேசத்தில், தலையில் தேங்காய் விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

பிடபெந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தேங்காய் பறித்துக் கொண்டிருந்த இடமொன்றில் வைத்து, தனது நண்பருடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.