தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான விடயங்கள் ஆரோக்கியமானதாக இருக்காதென்றும்' தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்ட தமிழரசு கட்சி தனியாக பதிவு செய்வது ஆரோக்கியமானதாக இருக்குமா என்றும் இரு கட்சிகள் வெளியேற்றுவதாகவும் கூறப்படுகின்றது என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த 26ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போது அவர்களுக்கான திகதியை அவர்களால் சரியாக குறிப்பிட முடியாது போனது. ஆனால் விரைவில் கலந்துரையாடவுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்கனவே 4 கட்சிகளாக இருந்தன.
அதிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சி வெளியேறிய பின்னர் தலைவர் இராம சம்பந்தனின் முயற்சியால் புளொட் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன உள்வாங்கப்பட்டன.
'
அதற்குப் பின்னர் அவர்கள் உள்ளுராட்சி தேர்தல்கள் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்கள். அதில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
ஆகவே, அவர்களை இப்போது வெளியேற்றுவதென்பதை சரியான நிலைப்பாடாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை கூட்டாக தேர்தலை கேட்டு அவர்களில் சில அங்கத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
அதனால் அவ்வாறான சூழிநிலையில் அவர்களை வெளியேற்றுவததென்பது சாதமானதாகவும், சரியானதான நிலைப்பாடாக இருக்க மாட்டாதென அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய முரண்பட்ட தொனியில், கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாவதாக் இருக்கின்றது.
இவ்வாறான விடயங்களை மாற்றப்பட வேண்டியதென்பது உண்மை, பேசபட்ட வேண்டிய தென்பதும் உண்மை, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்த வேண்டுமென்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது ஆரோக்கியமாக இருக்காதென்று நினைக்கின்றேன்' என்றார்.