நல்லூர் பிரதேச சபையின் தலைவர் மீதான தாக்குதலை கண்டித்து புறக்கணிப்பு போராட்டம்!

நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் மீது இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் இன்று சபை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி பிரதேச சபையின் தவிசாளர் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள பிரதேச சபைகள் அனைத்திலும் சபை புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பிரதேச சபை தலைவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், சகல சபைகளிலும் கண்டனத் தீர்மானம் நிறைவவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் சபைகள் கலைக்கப்பட்டு உறுப்பினர்கள் வீதியில் நின்று போராட்டம் நடத்தினர். இதேவேளை நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற சபை புறக்கணிப்பு போராட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராச கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை கடுமையாக கண்டித்துடன், இராணுவம் சi பயின் நிலத்தை அத்துமீறி அக்கிரமித்துள்ளமை தவறு என சுட்டிக்காட்டியமையினாலேயே சபையின் தலைவர் மீது தாக்கு தல் நடத்தப்பட்டதாக தெரிவித்ததுடன்,

இதற்கு இங்கு பாதுகாப்பு கடமையில் இருப்பதாக கூறுபவர்களும், அவர்களுக்கு பொறுப்பாகவள்ள அரசாங்கமும் நிச்சயமாக பொறுப்புக் கூறவேண்டும் என கூறியதுடன், இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தில் உச்சம். இதற்கு எதிராக நாம் தொ டர்ந்தும் நியாயம் கேட்டு போராடுவோம் எனவும் கூறினார்.

இதேவேளை இன்று நடைபெற்ற போராட்டங்கள் எதிலும் திணைக்களத்திலுள்ள அரச ஊழியர்களும் போராட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.