நாடளாவிய ரீதியில் 100,000 மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம்!

நாடளாவிய ரீதியில் 100,000 மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம்!
நாடளாவிய ரீதியில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளோம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
 
மகிந்த ஆட்சிக்கு வந்து தலைமையேற்று 10 ஆவது  வரவு செலவுத்திட்டம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் உரையாற்றும் போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு  100,000 மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.   
 
இதேவேளை, வடக்கிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கில் உள்ள அரச வெளிக்கள உத்தியோகத்தர்கள் சுமார் 4500 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் ஒரே நேரத்தில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Make a website for free Webnode