நாளை (3) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (3) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமன்ய நிக்காயவின் பீடாதிபதி வேவல்தெனிய மேதாலங்கார தேரரின் மறைவை ஒட்டி இந்த துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேதலங்கார தேரர் கடந்த புதன்கிழமை 103 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

துக்கம் அனுட்டிக்கும் நோக்கில் நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் 3ம் திகதி மூடப்பட உள்ளது. எதிர்வரும் 3ம்திகதி மீரிகம தேசிய பாடசாலை மைதானத்தில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.