மும்பை கடற்படை தளம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ் சிந்து ராக்ஸாக் நீர் மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ் சிந்து ராக்ஸாக் என்ற நீர்மூழ்கி கப்பலில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகள் கடலில் குதித்து தப்பினர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் அதிகாரிகள் அடங்குவர்.
தீ விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மத்திய கப்பல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கப்பல் வெடித்து தீப் பிடித்ததற்கு நாசவேலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.