நெல்சன் மண்டேலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை!

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 94, உடல் நலக் குறைவு காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று நோய் காரணமாக அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில தினங்களாக, மீண்டும் நுரையீரலில் பாதிப்பு அதிகமாகி அவதிப்பட்டார். 

நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, அவர் உடல் நிலை மிக மோசமடைந்தது. உடனே, ஜோகன்னஸ்பர்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

"அவருக்கு, வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்´ என, தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். 

மேலும், மண்டேலா உடல்நிலை முன்னேற்றமடைய, தானும், நாட்டு மக்களும் விரும்புவதாகவும், ஜூமா தெரிவித்துள்ளார்.