நெல்சன் மண்டேலாவின் நிலை கவலைக்கிடம்

தென் ஆப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன் ஜோகன்னஸ்பர்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.