நேற்றைய தோல்வியுடன் சிக்கலில் வீழ்ந்தது ஹொங்கொங்!

இருபது ஓவர் உலகக் கிண்ண ´பி´ பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹொங்கொங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் ஹொங்கொங் அணி, இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 

பங்கதேஷின் சிட்டகாங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்ட்ங்கள் எடுத்தது. 

ஹொங்கொங் அணி சார்பில் அதிகபட்சமாக சாப்மேன் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அகமது ஷேஸாத் 68 ஓட்டங்களும், சஃபியுல்லா 51 ஓட்டங்களும் விளாசினர். இதனால் அந்த அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. 

நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்கதேஷ் வெற்றி பெற்றது. 


Make a website for free Webnode