பங்களாதேஷ் அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மிர்பூர் மைதானத்தில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ​நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 128 ஓட்டங்களையும் பிரியஞ்சன் 60 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றனர். 

போட்டியில் வெற்றிபெற பங்களாதேஷ் அணி 290 ஓட்டங்களைப் பெற வேண்டும்.