இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு மூன்று மாத காலப்பகுதியில் தீர்வு வழங்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியை அமைத்து மூன்று மாத காலப்பகுதிக்குள் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய போது இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் உரிய முறையில் நடந்துகொள்ளத் தவறியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மத்திய பிரிவுகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழர்-மீனவர் பிரச்சினைக்கு மூன்று மாதத்தில் தீர்வு