பிரான்ஸில் சீக்கியக் குழந்தைககள் தலைப்பாகை அணியத் தடை!

பிரான்ஸ் அரச பாடசாலைகளில் குழந்தைகள் தலைப்பாகை அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சீக்கிய மதத்தை சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்பு, இது எங்களுடைய மத உணர்வுகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, எங்கள் குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளது. 

இந்திய செல்லும் பிரெஞ்சு ஜானாதிபதி பிராங்காய்ஸ் ஹொலாண்டாவிடம், அந்த தடையை நீக்க்குவது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.