பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (09) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானது. சன் இசிட்ரோ நகரத்திற்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

பூமிக்கடியில் 8.5 கிலோமீட்டரில் எற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.