புகையிரத்திலிருந்து இறங்க முற்பட்டவர் கீழே விழந்து மரணம்

புகையிரத்திலிருந்து இறங்க முற்பட்டவர் கீழே விழந்து மரணம்
நண்பர் ஒருவரை வழியனுப்பி விட்டு புகையிரதத்திலிருந்து இறங்க முற்பட்ட நபர் கீழே விழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
 
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று முன்தினம் இரவு (10.08.2014) ஞாயிற்றுக்கிழமை வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து இரவு 10மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் தபால் புகையிரதத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்புவதற்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு வந்து புகையிரதத்திற்குள் இருந்து நண்பருடன் உரையாடி விட்டு புகையிரதம் செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் மேற்படி நபர் வாயில் பக்கமாக கீழே இறங்க முற்பட்ட போது தவறி கீழே விழுந்துள்ளார்.
 
கீழே விழுந்த நபரை உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.
 
மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர் இல-102, கரப்பன்காடு, வவுனியாவை சேர்ந்த முனியாண்டி ஜெயபிரகாசம் வயது (65) என தெரிய வருகின்றது.
 
இவரின் மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மேற்படி மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளார்.