புற்றுநோயினால் அஞ்சத்தில் ஏஞ்சலினா : மகள்கள் குறித்தும் கவலை

பரம்பரையாக துரத்தி வரும் புற்றுநோயினால், விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் ஏஞ்சலினா ஜோலி. 

ஏஞ்சலீனாவின் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் புற்றுநோயின் பாதிப்பினாலே சீக்கிரமாகவே உயிரிழந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயது ஏஞ்சலினா சமீபத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார். 

ஏஞ்சலீனாவுக்கு மரண பயம் ஏற்பட்டதனாலேயே விரைவாக மார்பக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருங்கிய தோழி மரியா தெரிவித்துள்ளார். 

மேலும், ஏஞ்சலீனாவின் சொந்த மகள்களான 7 வயது ஷிலாக் மற்றும் 4 வயது விவினி குறித்தும் ஏஞ்சலினாவிற்கு கவலை அதிகரித்துள்ளதாம். 

ஏனென்றால், புற்றுநோய் அவர்களது இரத்தத்தில் பாரம்பரியமாக கலந்துள்ளதாம்.