பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்

பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்
ரம்புக்கன - நுகவல பிரதேச பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த 23ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் செய்தார். 
 
அதன்படி விசாரணை நடத்திய ரம்புக்கனை பொலிஸார் கான்ஸ்டபிளை கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.