பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சியை மூடிய கிரேக்க அரசாங்கம்

கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடிவிட்டது. 

அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது 

செவ்வாயன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த நேயர்கள் திடீரென அது நின்று போனதைக் கண்டிருக்கிறார்கள். 

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஹெலனிக் புரோட்காஸ்டிங் காப்பரேஷனுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளனர். 

இந்த ஒளிபரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற நிதிச் செலவுகள் ஒரு ஊழலுக்கு நிகரானவை என்று அரசாங்கப் பேச்சாலர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிறுவனத்தின் 2500 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுவதுடன், அந்த நிறுவனம் சிறிய அளவில் சுயாதீன பொது ஒளிபரப்பாளர்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது அதில் வேலைக்கும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.