மக்கள் ஏற்கும் வகையில் யாழ்.மாநகர சபைக் கீதம் தனிப்பட்ட நடவடிக்கை இல்லை என்கிறார் முதல்வர்

மக்கள் ஏற்கும் வகையில் யாழ்.மாநகர சபைக் கீதம் தனிப்பட்ட நடவடிக்கை இல்லை என்கிறார் முதல்வர்

 

கீதத்தில் பௌத்த மதக்கருத்தும் இடம் பெறவேண்டும், கீதத்தின் நேரம் குறைக்கப்பட வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் பாடக்கூடிய சுருதியுடன் கீதம் அமைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்
யாழ்.மாநகர சபைக் கீதம் மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலேயே மாற்றியமைக்கப்படும். இதுதொடர்பில் கட்சி உறுப்பினர்கள், கவிஞர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா.

யாழ்.மாநகர சபை கீதம் அமைப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஜனநாயக நாட்டில் தனது சொந்தக் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அடிப்படையில் ஆளும் கட்சி உறுப்பினர் மங்களநேசன் தனது கருத்தை முன்வைத்தார். அதில் அவர் கீதத்தில் பௌத்த மதக்கருத்தும் இடம்பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் கீதத்தின் நேரம்குறைக்கப்படவேண்டும், ஆண், பெண் இருபாலாரும் பாடக்கூடிய சுருதியுடன் கீதம் அமைக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள்உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன.

கீதம் மாற்றப்படுவதற்கு கட்சி உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தனிப்பட்ட ரீதியில் எனது கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.

அனைவராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அடையாளமாக மதம், மொழி, வரலாறு, பண் உட்பட எல்லா விடயங்களையும் முன்னிறுத்தி கீதம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் கட்சி உறுப்பினர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே கீதம் மாற்றப்பட வேண்டுமா? இல்øலாயா எனும் முடிவு எடுக்கப்படும் என்றார்.