மதுபோதையில் குழப்பம் விளைவித்தவருக்கு சீர்திருத்த உத்தரவு

மதுபோதையில் குழப்பம் விளைவித்தவருக்கு சீர்திருத்த உத்தரவு
மல்லாகம் நகரப்பகுதியில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டு, வீதியால் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபரை 100 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தில், சமுதாய வேலையுடன் கூடிய சமூக சீர்திருத்தபணிக்கு உட்படுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
 
கடந்த 20ஆம் திகதி மேற்படி சந்தேக நபர் இரவுவேளை, மது போதையில் வீதியால் சென்றவர்கள் மீது அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் தெல்லிப்பழை பொலிஸார் சந்தேநபரை கைது செய்திருந்தனர். வெள்ளிக்கிழமை (21) மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
 
அத்துடன், நீதிமன்றினால் சமுதாய கட்டளைக்கு உட்படுத்தப்பட்டோர்;;, அவர்கள் இழைத்த குற்றச் செயல்களை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளாது, போதிய வழிகாட்டல், ஆலாசனை வழங்குவதுடன், உளவளதுணை ஆலோசனை, ஆன்மீக வழிகாட்டல், தொழில் பயிற்சி, போன்றன நீதிமன்ற வளாகத்தில் உரிய அதிகாரிகளினால் வழங்கப்படுவதாக தெல்லிப்பழை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.