மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பஸ்ஸில் பயணித்த இளம்யுவதி ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் - கொழும்பு வீதியின் காக்கைப்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களெ இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை சிலாபம் ஆனந்த தேசிய கல்லூரிக்கு முன்பாக மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதியும் வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதியும்,மோதலில் ஈடுபட்டதாகவும் இந்தச் சம்பவத்தின் விளைவாகவே கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.