மலை மீது ஏறி, சாதனை படைக்கவுள்ள நேபாள பெண்கள்

நேபாளத்தின், மலை ஏறும் குழுவை சேர்ந்த, ஏழு பெண்கள், அந்நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள, மலை சிகரங்களில் ஏறி, சாதனை படைக்க திட்டமிட்டுள்ளனர். 

இதன்படி, உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான, எவரெஸ்டின் மீது, 2008ல் ஏறி சாதனை செய்தனர். 

அவுஸ்திரேலியாவில் உள்ள, 2,200 மீ, உயரம் கொண்ட, கொசீஸ்கோ மலை மீதும், ரஷ்யாவில் உள்ள, 5,600 மீ. உயரமான எல்பரஸ் மலை மீதும் ஏறி வெற்றி கண்டனர். 

வரும் மே, 27, 28 திகதிகளில், ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள, மிக உயர்ந்த மலையான, 5,800 மீ. உயரம் கொண்ட, கிளிமாஞ்சாரோ மீது ஏறி, சாதனை படைக்க, இக்குழு திட்டமிட்டுள்ளது. 

இவர்களை, நேபாள நாட்டு சுற்றுலா துறை, உற்சாகமாக வழியனுப்பி வைத்துள்ளது. இது வரை, நேபாள நாட்டை சேர்ந்த, 51 ஆண்கள் மட்டுமே, உலகின், ஏழு கண்டங்களிலும் உள்ள, மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.