இந்தி நடிகை மாதுரி தீக்சித் ஜலக் திக்லா ஜா என்ற பட சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். அப்போது மழையில் நனைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 நாய்க்குட்டிகளை அவர் கண்டார். அதன் மீது பரிதாபப்பட்ட தீக்சித் உடனே சூட்டிங்கை நிறுத்தினார்.
பிறகு தனது டாக்டர் கணவர் ஸ்ரீராம் மற்றும் டைரக்டர் சாஹில் சாப்ரியா ஆகியோரின் துணையுடன் அந்த நாய்க்குட்டிகளை மீட்டெடுத்தார்.
அவைகளை தனது அரவணைப்பில் வைத்துக்கொண்டு, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தோர்களுக்கு போன் செய்து காத்திருந்தார்.
அவர்கள் வந்தவுடன் நாய்குட்டிகளை ஒப்படைத்து நிம்மதி அடைந்த மாதுரி தீக்சித் பின்னர் சூட்டிங்கில் கலந்துகொண்டார். அப்போது இதுபோன்று ஆபத்தில் சிக்கியுள்ள விலங்குகளை காப்பாற்ற மக்கள் முன்வரவேண்டும் என்று கூறினார்