மின்சார கம்பி உருவில் நான்கு யானைகள் மேல் விழுந்தது எமன்கயிறு!

மட்டக்களப்பு - வாழைச்சேனை 129 மற்றும் 130ம் ரயில் வீதி கிலோமீற்றர் பகுதியில் அதிவலுகூடிய மின்கம்பியில் அகப்பட்டு நான்கு யானைகள் பலியாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரதேசவாசிகளால் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு இன்று (30) அறிவிக்கப்பட்டதை அடுத்து வாகரை பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று யானைகளின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.