முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….
பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றிவந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.
 
உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 
அந்தவகையில் உங்கள் முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…
சர்க்கரை ஸ்கரப்
சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்துகொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தி கீழிருந்து மேலாக தடவவும்.
 
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை போக்கலாம்
பால் மஞ்சள் ஸ்கரப்
சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை வாரத்திற்கு 3 முறை, சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்.
 
எலுமிச்சை தேன் ஸ்கரப்
சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்
வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை உபயோகித்து இந்த சிம்ப்ளிலான ஸ்கரப்களை பயன்படுத்தி உங்கள் அழகை பன்மடங்கு அதிகரியுங்கள்.

Create a free website Webnode