யாழில். இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழில். இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
இளவாலைப் பகுதியில் ஒரு சடலமும், கொக்குவில் பகுதியில் மற்றொரு சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
 
இளவாலை கல்லூரி வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விமலேந்திரன் உரேமிலா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர், இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தாரதர உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை கொக்குவில் மேற்கு வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய சூரியகுமார் டிலக்சன் என்ற மாணவனே கொக்குவில் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.