யாழ்.அளவெட்டியில் 7 வயது சிறுமி மீது வல்லுறவு: 24 வயதுக் காமுகன் கைது

யாழ்.அளவெட்டியில் 7 வயது சிறுமி மீது வல்லுறவு: 24 வயதுக் காமுகன் கைது
யாழ். அளவெட்டியில் ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய காமுகனை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
அளவெட்டி பத்துப் பனையடி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த திருமணமாகாத 24 வயதுடைய காமுகனே மதுபோதையில் இந்தக் கொரூரமான செயலில் ஈடுபட்டுள்ளான்.
 
மேற்படி இடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற அந்தியேட்டிக் கிரியை ஒன்றுக்குச் சென்று உணவுண்ட பின்னர் ஏனைய சில சிறுமிகளுடன் சேர்ந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இந்தச் சிறுமி அங்குள்ள ஆலயம் ஒன்றில் தாகத்திற்கு நீர் அருந்திக்கொண்டிருந்தபோது காம தாபத்துடன் மது போதையில் வந்த மேற்படி காமுகன் அந்தச் சிறுமியைத் தூக்கி வாயைப் பொத்தியவாறு அருகில் உள்ள வீடொன்றுக்குக் கொண்டு சென்றுள்ளான்.
 
வயதான பெண்மணியொருவர் மட்டுமே இருந்த அந்த வீட்டிற்குக் அந்தச் சிறுமியைக் கொண்டு சென்ற அந்தக் காமுகன் அங்கு வைத்து கதறக் கதறத் தனது தாபத்தைத் தீர்த்துள்ளான். 
 
பின்னர் சிறுமி வீதியால் அழுதுகொண்டு சென்று பெற்றோரிடம் விடயத்தைக் கூறினார். பெற்றோர் தெல்லிப்பழை காவல்துறை நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்தக் காமுகனைக் கைது செய்துள்ளனர்.