யாழ். ஆஸ்பத்திரி நோயாளரை பார்வையிட வருவோர் அவலம்; உச்சி வெயிலில் வீதியோரத்தில் பெரும்பாடு

யாழ். ஆஸ்பத்திரி நோயாளரை பார்வையிட வருவோர் அவலம்; உச்சி வெயிலில் வீதியோரத்தில் பெரும்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் வைத்தியசாலை பின்பக்க வாசலில் வெயிலில் கால்கடுக்க காத்து நிற்கும் அவலம் தொடர்கிறது.

யாழ்.மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து நோயாளர்களைப் பார்வையிடு வதற்கென வந்து மணிக் கூட்டுவீதிப் பக்கம் கூடும் மக்களினால் இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

அதாவது இந்த வீதியில் ஓட்டோக்கள் தரித்து நிற்கின்றன. நடைபாதை வியாபாரங்கள் இடம்பெறுகின்றன. மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையமும் உள்ளது. பயணிகளை இறக்கும் மினிபஸ்கள் பயணிகளை இறக்கி விடுவதும் ஏற்றுவ துமாகவும் இருப்பதால் இந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.

நோயாளர்களை பார்ப்பதற்கென உள்ளே விடப்படும் பார்வையாளர்கள் பெரிய கேற் இருந்தும் சிறைச்சாலைக்குள் செல்வது போன்று சிறிய “கேற்’ ஊடாகவே உள்ளே அனுமதிக் கப்படுகிறார்கள். இந்த வாசல் ஊடாகவே வைத்தியசாலையின் மருந்துலொறிகள், சடலங்களை ஏற்றிவரும் வாகனங்கள் என்பனவும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. அவ்வேளைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பார்வையாளர் உள்ளே செல்வதற்கு தடுத்து வருகின்றனர்.

இதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.