யாழ் இராணுவத் தளபதியினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பல்கலைக்கழக சமுகம் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டு வருகின்றது.
இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமைய இவ் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ,அனைத்துத் துறைப் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் மாணவ பிரதிநிதிகள் மற்றம் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 28 பின்னர் யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் முற்று முழுதாக செயலிழந்து காணப்படும் நிலையிலே பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் யாழ் கட்டளை தளபதி ஈடுபட்டு வருகின்றார்.
எனினும் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுடும் வரை தமது கல்விச் செயற்ப்பாடுகள் தொடரப் போவதில்லை என மாணவர்கள் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.