கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.
கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (14) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (15) உயிரிழந்தார்.
'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம் என வைத்தியசாலையில் கடமை புரிபவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இவருடைய மரணத்திற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லையெனவும'; உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் திருமணமாகி ஒரு வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான கனடா பிரஜை உயிரிழப்பு
