யாழ். பல்கலை. மாணவனை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அச்சம்!

யாழ். பல்கலை. மாணவனை கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அச்சம்!
யாழ்.பல்கலைக்கழக 3ம்வருட கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவு மாணவனை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மை சம்பவங்களை குறித்த மாணவனின் பெற்றோர் இன்றைய தினம் மனந்திறந்து வெளிப்படுத்தியிருப்பதுடன் தங்கள் மகனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர். 
மேற்படி சம்பவம் தொடர்பில் பெற்றோர் கூறுகையில்,
 
நேற்றைய தினம் மாலை 7.30மணயளவில் எங்கள் வீட்டுக்கு சிலர் வந்தார்கள். அவர்கள் கையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள்.
 
மேலும் என் மகன் எங்கே? என்னும் சற்று அதட்டும் தொனியில் கேட்டார்கள். ஆனால் அவர்கள் தங்களை யார்? என கூறவில்லை.
 
அதனோடு அவர்கள் முகமறைப்பு தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். அவர்கள் உ ள்ளே வருகின்றார்கள். என்பதை அறிந்ததும் எங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டோம்.
 
பின்னர் மகனுடைய மச்சான் மற்றும் சகோதரன் ஆகியோரை பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை கொண்டுபோகப்போகிறோம். மகனை உடனே கொண்டுவாருங்கள் என கேட்டார்கள்.
 
பின்னர் நாங்கள் அயலவர்களை உதவிக்கு அழைத்தோம். உடனே அவர்கள் வந்தார்கள். அதிகளவில் அவர்கள் வந்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்கள்.
 
அதனால் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம்.
 
மேலும் மனிதவுரிமை ஆணைக்குழு மற்றும் பொது அமைப்புக்களுக்கு விடயம் தொடர்பாக முறைப்பாடு கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறோம்.
 
ஆனால் விடுமுறை தினம் என்பதனால் திங்கட்கிழமையே மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்க முடியும் எனவும் கூறினர்.