யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை ஒருவர் மரணமடைந்திருந்த நிலையில், அவரது மகனும் இன்று புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தை நேற்றையதினமே மரணமடைந்திருந்தார்.
இவரது மகன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே மகன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தனியார் பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 37 வயதான மோகனரஞ்சன் என்பவரும் இவரது 10 வயதான மகன் மோகனரஞ்சன் முகிலன் ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.