ரயில் - பஸ் மோதி விபத்து: 23 பேர் காயம்

பேருவளை மற்றும் மல்கோனவிற்கிடையிலான மாகல்கந்த பிரதேசத்தில் ரயில் ஒன்றுடன் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் பதில் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலியே பஸ் மோதுண்டுள்ளது.