லேகியம், மூக்குப்பொடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

லேகியம், மூக்குப்பொடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட  மூக்குப்பொடி, மற்றும் லேகியம் விற்பனை செய்த இருவருக்கு 6 ஆறாயிரம் ரூபா அபராதம் விதிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நல்லூர் பகுதியில் இன்று யாழ். மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பகுதியில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூக்குப்பொடி மற்றும் லேகியம் விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்விரு வர்த்தகர்களும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
 


Make a website for free Webnode