வங்கிக்கு எடுத்துச் சென்ற 2 லட்சத்திற்கு அதிகமான பணம் கொள்ளை

வங்கிக்கு எடுத்துச் சென்ற 2 லட்சத்திற்கு அதிகமான பணம் கொள்ளை

வங்கி ஒன்றில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து நூறு ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

சிலாபம் - புத்தளம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இப் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

நேற்று (03) மாலை பணத்தை துவிச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றவேளை கொள்ளையிடப்பட்டுள்ளது. 

சிலாபம், ஜயபிம பிரதேசத்தைச் சேர்ந்த சீட்டிலுப்பு உரிமையாளர் ஒருவரது பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.