வயதான மூதாட்டிக்கு வழிவிட்டதால் 590.5 மில்லியன் டொலரை இழந்த நபர்

அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்ற ஒருவர், தனக்கு பின்னால் நின்ற வயதான பெண்மணிக்கு வழிவிட்டதால் 590.5 மில்லியன் டொலரை இழந்துள்ளார். 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஜெஃபிர்ஹில்ஸ் பகுதியில் உள்ள கடையில் குளோரியா மெக்கென்சி (84) என்ற மூதாட்டி ஜாக்பாட் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார். 

சமீபத்தில் நடந்த ஜாக்பாட் குலுக்கலில் அவர் வாங்கிய எண்ணுக்கு 590.5 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. 

இந்தநிலையில் இது குறித்து குளோரியா கூறியதாவது, 

லாட்டரி டிக்கெட் வாங்குவதற்காக நான் வரிசையில் நின்றிருந்தபோது முன்னால் நின்றிருந்த ஒருவர் என் வயதை பார்த்து பரிதாபப்பட்டு முன்னால் போய் சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று எனக்கு வழிவிட்டார். 

அவர் வழிவிட்டதால்தான் இந்த அதிர்ஷ்ட எண் கொண்ட லாட்டரி சீட்டு எனக்கு கிடைத்தது. கடவுளின் இந்த ஆசீர்வாதத்திற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றார்.