வலி. தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மாரடைப்பால் மரணம்

வலி. தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மாரடைப்பால் மரணம்
வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் சண்முகம் சிவகுமார்  (வயது 69) மாரடைப்புக் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (23) காலை உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த 21ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் இவர்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.  இந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார். 
 
மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த சிவகுமார், 2011ஆம் ஆண்டு  நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வலி.தென்மேற்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், வலி. தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளராக இருந்த என்.ஜெபநேசன், தவிசாளர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, சிவகுமார் கடந்த மார்ச் மாதம்  தவிசாளராக நியமிக்கப்பட்டார்.