மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் புதல்வரான வெக்ஸ்மன் லெம்பேட் (வயது-20) என்பவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த மூன்று இளைஞர்களும் இன்று சனிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னாரில் இருந்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் குறித்த 3 இளைஞர்களும் மன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பேசாலை நடுக்குடா வீதியில் மதியம் 2.30 மணியளவில் குறித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பனைமரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த 3 இளைஞர்களும் சில மணித்தியாலங்களில் பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் புதல்வரான வெக்ஸ்மன் லெம்பட் (வயது-20) என்பவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
ஏனைய இரண்டு இளைஞர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன