வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் ஏழு பேர் கைது

வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் ஏழு பேர் கைது

யாழ். திருநெல்வேலி வாள் வெடடுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 7 பேர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். திருநெல்வேலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் வாள் வெட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்கள் நாளை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
 


Create a website for free Webnode