விஜய்க்கு எதிராக திரும்பிய திமுக..!

விஜய்க்கு எதிராக திரும்பிய திமுக..!
நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் கத்தி. இந்த திரைப்படம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருகின்றது. 
 
சிறுநகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் படத்திற்கு அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ளது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இரண்டு விஜய்யும் கைகோர்த்தபடி ஒரு மகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் கொடுத்திருக்கலாம் என நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் போலீசிடம் சரணடையும் காட்சி பழைய ரமணாவை தான் ஞாபகப்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
 
இப்படி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்துள்ளது கத்தி படத்திற்கு . ஆனால் கத்தி படம் திமுக என்னும் கட்சியை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. காரணம் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக ஆளும்கட்சியின் பிரதான எதிர்கட்சியான திமுகவை மட்டும் குறிவைத்து மட்டம் தட்டிபேசியது தான். 2G அலைக்கற்றையில் ஊழல் நடந்தது.... காத்த கூட காசாக்கி வித்துடுவாங்கனு ஒரே வரில திமுகவுக்கு மரண அடி குடுத்துருப்பாரு விஜய்.
 
இந்த ஒற்றை வரி வசனம் தான் நேற்று முதல் திமுக தொண்டர்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. செய்தது தவறுதான் என்றாலும் ஊழல் என வரும்போது அனைவரையும் பாகுபாடின்றி கூறினால் யாருக்கும் தனித்துவமாக தெரியாது. இது ஆளும்கட்சியை காக்காய் பிடிப்பதற்கு, திமுகவை மட்டம் தட்டியுள்ளார் விஜய் என கோபாலபுரத்தில் நேற்று ஒரு சிறப்பு கூட்டமே நடந்துள்ளது.
 
ஏற்கனவே எழ முடியாத அளவிற்கு பலத்த அடிவாங்கியிருக்கும் திமுகவை விஜய் சீண்டி பார்த்துள்ளார். கத்திக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை திமுக வாய் திறக்கவில்லை அப்படி இருந்தும் திமுகவை குறிவைத்து தாக்கியுள்ளார் என கருத்துக்கள் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் இனிவரும் காலங்களில் விஜய் திமுகவுக்கு எதிரி என பலரும் கோசமிட்டுள்ளனர். மேலும் விஜய்க்கு எதிரான நடவடிக்கை என்றால் இனிமேல் முதலில் செல்வது திமுகவாக தான் இருக்கவேண்டும் எனவும் முடிவு செய்துள்ளனராம்.
 
படத்தில் விஜய் 2G ஊழல் என கூறியதுமே திமுகவுக்கு நெத்தியடி என பார்வையாளர்கள் கைதட்டலுடன் கூறுவது குறிப்பிடத்தக்கது

Make a website for free Webnode