விஜய் வழியில் பரத்

ஜில்லா படத்தில் விஜய் மோகன்லாலுடன் நடிப்பது போல், மலையாளப் படமொன்றில் பரத் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். 

பரத் தற்போது இந்திப் படமான ஜாக்பாட்டில் நடித்து வருகிறார். நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன் ஆகியோர் ஜாக்பாட்டில் பரத்துடன் நடிக்கும் நட்சத்திரங்கள். இதையடுத்து கூத்ரா என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார். 

ஏற்கனவே ஜெயராஜின் 4 த பீப்பிள் படத்தில் பரத் நடித்திருக்கிறார். பரத். கோபிகா நடித்த இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. 

மோகன்லாலுடன் நடிக்கப் போகிற படமும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.