விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த நபர் பரிதாபமாக பலி!

மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய விமானமொன்றில், பயணச்சீட்டு வாங்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

இத்தாலியின் ரிமினி நகரில் இருந்து ஐ-ப்ளை விமான நிறுவனத்தின் ஏ-330 பயணிகள் விமானம் நேற்று அதிகாலை ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. 

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, விமானத்தின் சக்கரங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். 

அப்போது, அடிப்பகுதியில் சக்கரத்திற்கு மேற்புறத்தில் உள்ள கம்பார்ட்மெண்டில் ஒரு நபர் இறந்து கிடந்தார். அவரது உடல் அப்புறப்படுத்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் அமெரிக்கா வாழ் ஆப்பிரிக்கர் என்றும், பயணசீட்டு வாங்காமல் விமானத்தின் அடிப்பகுதியில் மறைந்திருந்து பயணம் செய்தபோது, அதிக குளிர் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் தெரியந்துள்ளது. 

மேலும், இவர் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்யும் என்னத்தில் இருந்ததால், இந்த விமானத்தில் சில நாட்களாக இருந்திருக்காலம் என்றும், இந்த நபர் சுமார் நான்கு நாட்களுக்கு முன்னரே இறந்திருக்க கூடுமெனவும் தெரியவந்துள்ளது.