வில்லியம் பிறந்த அதே வைத்தியசாலையில் கேத்துக்கும் பிரசவம்

இங்கிலாந்து இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரியும் பிறந்த வைத்தியசாலையிலேயே கேத் மிடில்டனுக்கும் பிரசவம் நடத்த அரச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்ஷூக்கும் (30) கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. 

தற்போது கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவருக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இளவரசி கேத் மிடில்டனுக்கு அவரது கணவர் இளவரசர் வில்லியம் பிறந்த தனியார் வைத்தியசாலையில் பிரசவம் நடத்த அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த வைத்தியசாலையின் பெயர் லிங்டோ விங் ஆப் செயின்ட் மேரீஸ். இது மேற்கு லண்டனில் பேட்டிங்டன் என்ற இடத்தில் உள்ளது. 

இங்கு தான் இளவரசர் சார்லசும், அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் பிறந்தனர். 

இதற்கிடையே, இளவரசி கேத் மிடில்டன் (சிசேரியன்) சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெற விரும்பவில்லை. இயற்கையான முறையில் குழந்தை பெறவே விரும்புகிறார். 

அதற்கான வார்டில் தான் பிரசவத்துக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.