உலகநாயகன் கமலஹாசன் இயக்கி நடித்திருக்கும் படம் விஸ்வரூபம்.
பிரம்மாண்டமான முறையில் தயாராகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
தீவிரவாதத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கமலுடன், நடிகை ஆண்ட்ரியா, அமெரிக்க மொடல் அழகி பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஷங்கர்- ஈசான்- லாய் என்று மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 6ம் திகதி நடைபெறுவதாய் இருந்தது.
சில காரணங்களால் திகதி தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீடு இன்று மதுரையில் நடைபெற்றது.
விஸ்வரூபம் படத்தின் முதல் இசை குறுந்தகடை கமலஹாசன், மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவருக்கு வழங்கினார்